ஆதி அருள் நாடுவோம் - வல்ல
அல்லாஹ் புகழ் பாடுவோம் - நல்ல
நயமாகவே எங்கள் நபி நாதர் மேல்
ஸலவாத்தும் ஸலாம் ஓதுவோம்.
உயர் பக்தி நெறி செறியும்
கெக்கிராவை பதி பொலியும்
மகா வித்யாலயம் மலை போல் துலங்க
இறையானவனைப் போற்றினோம் - என்றும்
ஆதி அருள் நாடுவோம்.
சிறு கல்வி பயில் பாலரும்
பெரு ஆசிரியர் குழுவும்
நிறை செல்வங்களாய் நிதமும் வாழ்ந்திட
இறையானவனைப் போற்றினோம்
என்றும் ஆதி அருள் நாடுவோம்.
என் ஜீவன் நீயே அன்னையே
நமதாசை நிறைவேறவே
என்றும் அழிவற்ற எம் இறை துணை நாடியே
என இரு கரம் ஏந்துகின்றோம்
என்றும் ஆதி அருள் நாடுவோம்.